செய்திகள் இந்தியா
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
திருப்பதி:
நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய, திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் விநியோகம் செய்த விவகாரத்தில் தேவஸ்தான பொறியியல் துறை மூத்த அதிகாரியை சிபிஐ விசாரணைக் குழு வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக விசாரணைக் குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக விற்பனை செய்யப்படும் லட்டு தயாரிப்பதற்காக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டெண்டா் விடப்பட்டு பல்வேறு நிறுவனங்களிடமிருந்து நெய் பெறப்படுகிறது. அவ்வாறு கடந்த ஆண்டு மே மாதம் டெண்டா் விடப்பட்டதில் திண்டுக்கல்லை சோ்ந்த ஏ ஆா் பால் பண்ணை நிறுவனம் ஒரு கிலோ நெய் ரூ 319.80 என 10 லட்சம் கிலோ நெய் விநியோகம் செய்ய ஒப்பந்தம் செய்தனா்.
அந்த நிறுவனத்தின் பெயரில் அனுப்பப்பட்ட நெய்யில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதை தேவஸ்தான அதிகாரிகள் சந்தேகித்தனா்.
இதை உறுதி செய்ய குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு ஆணைய ஆய்வகத்துக்கு மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஆய்வகத்தில் கலப்படம் உள்ளது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து திண்டுக்கல் பால் பண்ணையில் விசாரணை மேற்கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு உறுப்பினா்கள் விசாரணை மேற்கொண்டு, நிர்வாக இயக்குநர் ராஜூ ராஜசேகரன், போலே பாபா, பால் பண்ணை முன்னாள் இயக்குநர்கள் பிபின் ஜெயின், பொமில் ஜெயின், வைஷ்ணமி டெய்ரி சிஇஓ அபூர்வா வினய் காந்த் சாவ்டா, தேவஸ்தான முன்னாள் அறங்காவல் குழு தலைவர் சுப்பா ரெட்டியின் உதவியாளர் ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர்.
கடந்த 8 ஆம் தேதி திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக விற்பனை செய்யப்படும் லட்டு தயாரிப்புக்கு பாமாயிலை நெய் போன்று மணக்கச் செய்யும் அசிட்டிக் அமில ஆஸ்டர் போன்ற ரசாயனங்களை விநியோகம் செய்த குற்றத்திற்காக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அஜித்குமார் சுகந்த் என்பவரை சிபிஐ விசாரணைக் குழுவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் முன்பு தேவஸ்தானத்தில் கொள்முதல் பிரிவு பொது மேலாளராக பணியாற்றிய பொறியியல் துறை மூத்த அதிகாரி ஆர்எஸ்எஸ்விஆர் சுப்பிரமணியத்தை சிபிஐ விசாரணைக் குழு வெள்ளிக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக விசாரணைக் குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இவர் தேவஸ்தானத்தில் கொள்முதல் பிரிவு பொது மேலாளராக பணியாற்றியபோது லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நெய் உள்ளிட்ட மூலப் பொருட்களை வாங்குவதற்குப் பொறுப்பேற்றதாகவும் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 11:13 am
ஏர் இந்தியா விமானி போதைப் பொருள் உட்கொண்டிருந்தது நிரூபணமானது: பணிநீக்கம் செய்யப்பட்டார்
September 3, 2026, 9:58 pm
காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியாரின் பெண்கள் குறித்த கருத்துக்கு கேரள முதல்வர் கண்டனம்
September 2, 2026, 12:40 am
நீட் பிரச்சினையில் போராடியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ததால் சிஜேபியின் செப்.5 போராட்டம் வாபஸ்
September 1, 2026, 10:18 am
அமெரிக்காவில் இந்திய தேசியக் கொடி அவமதிப்பு: இந்தியா கடும் எச்சரிக்கை
August 31, 2026, 7:17 pm
68 டன் நிவாரண பொருட்களை நேபாளத்துக்கு அனுப்பியது இந்தியா
August 30, 2026, 8:36 pm
புனித மக்காவில் தொழுகை விரிப்புகளை வழங்கிய பாலிவுட் நடிகை கூட்ட நெரிசலில் சிக்கி தடுமாறினார்
August 25, 2026, 3:49 pm
ஈரானுடன் வர்த்தக உறவு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை
August 24, 2026, 4:35 pm
