நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹாங்காங் கட்டடத் தீ விபத்து: மரண எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது 

ஹாங்காங்:

ஹாங்காங்கின் தை போ (Tai Po) வட்டாரத்தின் குடியிருப்புக் கட்டடத்தில் மூண்ட தீயில் மாண்டோரின் எண்ணிக்கை 128க்கு உயர்ந்துள்ளது. பலரை இன்னும் காணவில்லை.

வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) குடியிருப்புப் பேட்டையில் 8 கட்டடங்கள் உள்ளன.

அவற்றில் 4 கட்டடங்களில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

11 தீயணைப்பாளர்கள் உட்பட 79 பேர் காயமடைந்ததாக அரசாங்கப் பேச்சாளர் கூறினார்.

ஹாங்காங்கில் 80 ஆண்டுகளில் ஏற்படாத மோசமான தீச்சம்பவமாக இது கருதப்படுகிறது.

தீ பரவியதன் காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

பேட்டையில் நடந்துகொண்டிருந்த புதுப்பிப்புப் பணி குறித்து நகரின் ஊழல் ஒழிப்புப் பிரிவு புலனாய்வு செய்கிறது.

தீச்சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் புதுப்பிப்புப் பணிக்குப் பயன்படுத்திய நுரை பொருள்களைத் (foam packaging) தீ மூண்ட இடத்தில் அலட்சியமாக விட்டுச்சென்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

தீ ஏற்பட்டபோது எச்சரிக்கை மணி அடிக்கவில்லை என்று குடியிருப்புப் பேட்டையில் வசிப்போர் கூறினர்.

ஆதாரம்: AFP  

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset