நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கை கனமழை, நிலச்சரிவு பலி 31 ஆக அதிகரித்தது

கொழும்பு: 

இலங்கையில் கடந்த 11 நாட்களாக பெய்து வரும் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதுவரை 31 பேர் உயிரிழந்ததாகவும், 4,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கையின் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால், மொத்தமுள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வானிலை பாதிப்பு தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள இலங்கையின் பேரிடர் மேலாண்மை மையம், "நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இதுவரை 31 மரணங்கள் பதிவாகி உள்ளன. 1,158 குடும்பங்களைச் சேர்ந்த 4,008 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14 பேர் காணாமல் போயுள்ளனர்.

கனமழை காரணமாக இலங்கையின் பல இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 41 குடும்பங்களைச் சேர்ந்த 131 பேர் 5 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், 136 குடும்பங்களைச் சேர்ந்த 472 பேர் தற்போது உறவினர் வீடுகளில் தங்கி உள்ளனர்" என தெரிவித்துள்ளது.

இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்க அந்நாட்டின் அதிபர் அநுர குமார திசநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

- நிஹார்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset