நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஹாங்காங்கின் குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: 44 பேர் மரணம்

ஹாங்காங்:

ஹாங்காங்கின் தாய் பொ வட்டாரத்தின் குடியிருப்புக் கட்டடத் தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44க்கு உயர்ந்துள்ளது.

45 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

குறைந்தது 279 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என அதிகாரிகள் கூறினர்.

30 ஆண்டுகளில் நேர்ந்த ஆக மோசமான தீச்சம்பவமாக அது கருதப்படுகிறது.

சம்பவ இடத்திலேயே 40 பேர் மாண்டதாகத் தீயணைப்புப் பிரிவின் துணைத் தலைவர் தெரிவித்தார்.

தீப்பற்றி எரிந்த 2 கட்டடங்களின் உயர் மாடிகளை எட்ட தீயணைப்பாளர்கள் சிரமப்பட்டதாக அவர் சொன்னார்.

இரவில் தீயணைக்கும் பணிகளை மேற்கொள்ளும்போது கூடுதல் அபாயங்கள் உள்ளன. இப்போதுகூட சம்பவ இடத்தில் வெப்பநிலை சூடாக இருக்கிறது.

தீப்பிடித்த 8 கட்டடங்களில் 4 கட்டடங்களின் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீயணைப்புப் பணிகள் மாலை வரை தொடரும்.

கட்டடத்தில் பராமரிப்புப் பணிகளை நடத்திய நிறுவனத்தை விசாரிப்பதாகக் போலிசார் குறிப்பிட்டனர்.

அவர்களுடைய கவன குறைவால்தான் அந்த விபத்து ஏற்பட்டதாகவும் தீ கட்டுக்கடங்காமல் பரவியதாகவும் நம்புவதற்கு காரணம் இருப்பதாகக் போலிஸ் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset