நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்

தேனி: 

சபரிமலை யாத்​திரை செல்​லும் பக்​தர்​கள் எரு​மேலி பெரு​வழிப்​பாதை​யில் 46 கி.மீ. தொலை​வும், சத்​திரம் வனப் பகு​தி​யில் 12 கி.மீ. தொலை​வும் கடந்​து செல்ல வேண்​டும். வாக​னங்​களில் பம்பை வரும் பக்​தர்​கள் சந்​நி​தானம் வரை 5 கி.மீ. தொலைவு மலை​யேறிச் செல்ல வேண்​டும்.

தற்​போது மண்டல வழி​பாட்​டுக்கு வரும் பக்​தர்​கள் பலருக்​கும் மலை​யேற்​றம் மற்​றும் நெரிசலில் நிற்​கும்​போது உடல்​நலக் கோளாறு ஏற்​படு​கிறது. இவர்​களுக்​காக அப்​பாச்​சிமேடு உள்​ளிட்ட செங்​குத்​தான ஏற்​றப் பகு​தி​களில் இதய பாதிப்​புக்​கான முதலுதவி சிகி்ச்சை மையம் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், சந்​நி​தானத்​தில் ஹோமியோபதி மருத்​து​வ​மனை, பிசி​யோதெரபி, உடல்​வலியைப் போக்​கும் மசாஜ் உள்​ளிட்ட சிகிச்​சைகள் அளிக்​கப்​படு​கின்​றன.

இதுகுறித்து முது​நிலை மருத்​துவ அதி​காரி பிபின் கோபால் கூறிய​தாவது: பெரும்​பாலான பக்​தர்​களுக்கு சுவாசப் பிரச்​சினை ஏற்​படு​கிறது. இதற்கு வயதும், ஏற்​கெனவே உள்ள நோயும் காரண​மாகும்.

மேலும், பயணத்​தின்​போது உணவு முறை​களில் ஏற்​படும் மாற்​றங்​கள் மற்​றும் ஒவ்​வாமை போன்​றவற்​றால் வயிற்​றுப் பிரச்​சினை​களுக்​கும் சிகிச்சை பெறுகின்​றனர்.

மண்டல வழி​பாடு தொடங்​கிய​தில் இருந்து 8 நாட்​களில் இது​வரை 8 பேர் மாரடைப்​பால் உயி​ரிழந்​துள்​ளனர். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

தேவசம் போர்டு தலை​வர் ஜெயக்​கு​மார் கூறும்​போது, “நீலிமலை பகு​தி​யில் ஏறும்​போது வயதானவர்​கள் 20 நிமிடங்​களுக்கு ஒரு​முறை ஓய்​வெடுத்த பிறகே செல்ல வேண்​டும்.

அடிக்​கடி சுடு​தண்​ணீர் அருந்த வேண்​டும். இது​போன்ற விதி​முறை​களைக் கடைபிடித்​தால் எந்த பாதிப்​பும் ஏற்​ப​டாது” என்​றார். 

பக்​தர்​கள் கூறும்​போது, “கடுமை​யான மலை​யேற்​றத்​துடன், நெரிசலும், பல மணி நேரம் காத்​திருப்​ப​தா​லும் நோயின் தன்மை அதி​க​மாகி விடு​கிறது.

மேலும், குடிநீர், கழிப்​பிட வசதி​கள் குறை​வாக உள்​ளன. நெரிசலில் நிற்​கும்போது மருத்​துவ சிகிச்சை பெற முடி​யாமல் பலரும் சிரமப்​படுகிறோம்” என்றனர்​.

- ஆதாரம்: தி ஹிண்டு

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset