நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசியாவில் நிலச்சரிவு, கடும் வெள்ளம்: 16 பேர் பலி

ஜாகர்த்தா:

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கனத்த மழை காரணமாக நிலச்சரிவும் திடீர் வெள்ளமும் ஏற்பட்டுள்ளன. குறைந்தது 16 பேர் மாண்டனர். மேலும் 10 பேரைக் காணவில்லை என்று காவல்துறை கூறியுள்ளது.

மீட்புக் குழுக்கள் வட சுமத்ராவில் சிக்கியுள்ள மக்களைச் சென்றடைய சிரமப்படுவதாக அது தெரிவித்தது.

சிபொல்கா (Sibolga) பகுதியில் ஆகக் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணியாளர்கள் 5 பேரின் சடலங்களையும் காயமடைந்த 3 பேரையும் மீட்டனர். இன்னும் 4 பேரைத் தேடுகின்றனர்.

அருகிலுள்ள மத்திய தபனுலி (Central Tapanuli) வட்டாரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மாண்டனர். சுமார் 2,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.

மன்டாய்லிங் நடால் (Mandailing Natal) வட்டாரத்தில் பாலம் ஒன்று சேதமடைந்தது. 470 வீடுகள் புதையுண்டன.

அவசரகாலத் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சிபொல்காவின் காவல்துறைத் தலைவர் கூறினார். அபாயமிக்க வட்டாரங்களில் இருந்து உடனே வெளியேறும்படி குடியிருப்பாளர்களைக் காவல்துறை கேட்டுக்கொண்டது.

அக்டோபரிலிருந்து மார்ச் வரை இந்தோனேசியாவில் பருவமழையை எதிர்பார்க்கலாம். அதனால் நிலச்சரிவும் வெள்ளமும் ஏற்படுவது வழக்கம்.
தொடர்புடையவை:

ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset