நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஐயப்ப சுவாமி வழிபாடு டிரெண்டிங் வழிபாடு அல்ல; வழிமுறைகளை முறையாக பின்பற்றுங்கள்: யுவராஜா குருசாமி வலியுறுத்தல்

பத்துகேவ்ஸ்:

ஐயப்ப சுவாமி வழிபாடு டிரெண்டிங் வழிபாடு அல்ல. அனைவரும் வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

மலேசிய ஐயப்ப சேவா சங்கத்தின் தலைவர் யுவராஜா குருசாமி இதனை வலியுறுத்தினார்.

கடந்த நவம்பர் 5ஆம் தேதி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களின் விரதத்தை தொடங்கினர்.

ஒரு மண்டலம் விரதமிருந்து பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்வார்கள்.

இந்த ஐயப்ப வழிபாட்டிற்கு என வழிமுறைகள் நெறிமுறைகள் உள்ளன.

குறிப்பாக சபரிமலை  கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகள் தான் இங்கும் பின்பற்றப்படுகிறது.

இதில் குருசாமிகள் தான் நமக்கு வழிக்காட்டிகளாக உள்ளனர்.

ஆனால் இப்போது ஐயப்ப வழிபாடு என்பது டிரெண்டிங் வழிபாடாக மாறி வருகிறது.

பெண்கள் மாலை அணிவது, ஐயப்ப சுவாமிக்கு தேவையில்லாத அலங்காரம் செய்வது, சபரிமலை ஆன்மீக பயணத்தை சுற்றுலா போன்று ஏற்பாடு செய்வது உட்பட பல சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இது குறித்து நாம் ஏதும் கேள்வி எழுப்பினால், உடனே சம்பந்தப்பட்டவர்கள் கோபப்படுகின்றனர்.

இதை கேட்க நீங்கள் யார் என்றுக் கூட கேள்வி எழுப்புகின்றனர்.

ஐயப்ப சுவாமி வழிபாட்டில் வழிமுறைகளுக்கும் கட்டொழுங்கிற்கும் தான் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

அது மீறும் போது கண்டிப்பாக கண்டனங்களும் எதிர்ப்புகளும் தெரிவிக்கப்படும்.

அதே வேளையில் நமது நடவடிக்கைகள் அனைத்தும் சபரிமலையில் உள்ளவர்களும் கண்கானித்து வருகின்றனர்.

ஒருவர் செய்வது அனைத்து ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தும்.

ஆகவே இவ்விவகாரத்தில் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும்.

குறிப்பாக ஐயப்ப சுவாமி வழிபாட்டிற்கு எதிராக யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்று யுவராஜா குருசாமி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset