நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூரில் மாபெரும் நாசி கண்டார் உணவுத் திருவிழா; பொதுமக்கள் திரண்டு வர வேண்டும்: டத்தோ மோசின்

கோலாலம்பூர்:

கோலாலம்பூரில் மாபெரும் நாசி கண்டார் உணவுத் திருவிழா நடைபெறவுள்ளது.

பிரெஸ்மா தலைவர் டத்தோ முகமத் மோசின் இதனை கூறினார்.

நாசி கண்டார் பினாங்கு மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்றது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

அந்த வகையில் நாசி கண்டார் 3.0 உணவு திருவிழா இம்முறை மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திருவிழா வரும் நவம்பர்  29, 30ஆம் தேதிகளில் DATUM Jelatek Shopping Center  Kuala Lumpur என்ற இடத்தில் காலை பத்து மணி முதல் இரவு பத்து மணி வரை நடைபெறுகிறது.

பினாங்கு, கோலாலம்பூர், ஜொகூர் மாநிலத்தில் உள்ள நாசி கண்டார் உணவகங்கள் ஒரு குடையின் கீழ் இணைந்து இந்த மாபெரும் நாசி கண்டார் உணவுத் திருவிழாவில் பங்கேற்கிறது.

நாசி கண்டார் உணவை விரும்பி சாப்பிடும் மலேசியர்கள் இந்த உணவு திருவிழாவில் கலந்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

2926 ஆம் ஆண்டு மலேசியாவுக்கு வருகை புரியுங்கள்  ஆண்டை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்த உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் உலக அளவில் நாசி கண்டார் உணவை பிரபலப்படுத்தும் வகையில் இந்த உணவுத் திருவிழா மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் மாலை 3.33 மணிக்கு நாசி கண்டார் வாங்கும் 333 பேருக்கு தலா 3 வெள்ளிக்கு  விற்கப்படும்.

தற்போது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கூட நாசி கண்டார் உணவை விரும்பி சாப்பிடுகின்றனர்.

அந்த அளவுக்கு இன்று நாசி கண்டார் உணவு புகழ்பெற்று விளங்குகிறது என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset