நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷம்சுல் இஸ்கந்தரை விசாரிக்க எம்ஏசிசிக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது: பிரதமர்

கோலாலம்பூர்:

ஷம்சுல் இஸ்கந்தரை விசாரிக்க எம்ஏசிசிக்கு முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

எனது முன்னாள் அரசியல் செயலாளர் ஷம்சுல் இஸ்கந்தர் முகமட் அகின் தொடர்பாக எழும் எந்தவொரு குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சுதந்திரமாக உள்ளது.

எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எந்த வெளிப்புற தலையீடும் இல்லாமல் உடனடி விசாரணையை நடத்த சுதந்திரமாக உள்ளது என்பதை நான் வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறினார்.

ஷம்சுல் நேற்று மாலை ராஜினாமா செய்த சுமார் 17 மணி நேரத்திற்குப் பிறகு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த உறுதிமொழியை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்




தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset