நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வீடற்ற ஆடவர் மீது தண்ணீர் ஊற்றிய வீடியோ வைரலானது: ஆம் பேங்க் மன்னிப்பு கோரியது

கோலாலம்பூர்:

வீடற்ற ஆடவர் மீது  தண்ணீர் ஊற்றிய வீடியோ வைரலான சம்பவம் தொடர்பில் ஆம் பேங்க் மன்னிப்பு கோரியுள்ளது.

கோலாலம்பூரின் தாமான் மலூரி கிளைக்கு வெளியே வீடற்றவர் என்று நம்பப்படும் ஒரு நபர் மீது தண்ணீரில் ஊற்றப்பட்டு உதைக்கப்படுவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

குறிப்பாக பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இந்த சம்பவத்தால் மிகவும் கவலையும் வருத்தமும் அடைந்துள்ளதாக வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், வங்கி வளாகத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்பே அதன் முதன்மையான முன்னுரிமை என்று வலியுறுத்தியுள்ளது.

நடந்த சம்பவத்தால் நாங்கள் மிகவும் வருத்தமும் கவலையும் அடைந்துள்ளோம்.

எந்தவொரு நபரும் இந்த முறையில் நடத்தப்படக்கூடாது.

நாங்கள் அனைத்து அதிகாரிகளுடனும் இணைந்து பணியாற்றி வருகிறோம்.

இது மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வதே எங்கள் குறிக்கோள் என்று வங்கி தெரிவித்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset