நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆதரவு கடிதத்தற்காக தான் ஷம்சுல் ராஜினாமா செய்தார்; பணம் வாங்கியதற்காக அல்ல: ங்கா

கோத்தா கினபாலு:

ஆதரவு கடிதத்தற்காக தான் ஷம்சுல் ராஜினாமா செய்தார். பணம் வாங்கியதற்காக அல்ல.

வீட்டுவசதி ஊராட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் இதனை கூறினார்.

நேற்று இரவு சபாவில் பிரச்சாரம் செய்தபோது அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு பிம்பத்தை பாதுகாக்க முயன்றார்.

கோத்தா கினபாலு பகுதி முழுவதும் ஜசெக வேட்பாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்தில் சுமார் 800 விருந்தினர்கள் முன் பேசிய ங்கா, ஊழலை எதிர்த்துப் போராடுவதில் கட்சி உறுதியாக இருப்பதாக கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளர் பதவியில் இருந்து ஷம்சுல் இஸ்கந்தர் ராஜினாமா செய்தது ஊழல் காரணமாக அல்ல.

அதற்கு பதிலாக கடந்த ஆண்டு ஆதரவு கடித பிரச்சினையுடன் அதை இணைத்தும் அவர் கூறினார்.

ஊழலில் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம். சகிப்புத்தன்மை இல்லை, பாதுகாப்பு இல்லை.

எனவே தான் இன்று, பிரதமரின் மூத்த அரசியல் செயலாளர் ஷம்சுல் தனது ராஜினாமாவை அறிவித்தார்.

அவர் ஊழல் செய்யவில்லை. இந்த ஒப்பந்ததாரர் மருத்துவமனை ஒப்பந்தத்தைப் பெற வேண்டும் என்று கூறி, ஒரு ஆதரவு கடிதத்தை அனுப்பினார்.

அவர் எந்தப் பணத்தையும் எடுக்கவில்லை. ஆனால் அவர் இந்த ஆதரவு கடிதத்தை அனுப்பியிருக்கக் கூடாது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset