நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

விளையாட்டு நிருபர் ஹரேஷ் தியோல் இரண்டு ஆடவர்களால் தாக்கப்பட்டார்

கோலாலம்பூர்:

விளையாட்டு நிருபரும் தேசிய பத்திரிகையாளர் மன்றத்தின் துணைத் தலைவருமான ஹரேஷ் தியோல் இரண்டு நபர்களால் தாக்கப்பட்டார்.

இந்த சம்பவம் இன்று பங்சாரில் நடந்தது.

TwentyTwo13 என்ற  இணைய செய்தி தளத்தின் இணை நிறுவனருமான ஹரேஷ், தனது காரில் சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டார்.
மற்றொரு நபர் கைத்தொலைபேசியில் சம்பவத்தை படம் பிடித்ததாகவும் எக்ஸ் வலைத்தளத்தில் ஒரு பதிவில் அறிவித்தார்.

சம்பவத்தைத் தொடர்ந்து போலிஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலிஸ் தலைவர் ஏசிபி ஹூ சாங் ஹூக்கைத் தொடர்பு கொண்டபோது, ​​இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.

மேலும் சந்தேக நபரையும் சம்பவத்தின் பின்னணியில் உள்ள நோக்கத்தையும் அடையாளம் காண விசாரணைகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், சுயேட்சை ஊடக இயக்கம் (ஜெராம்) முகநூலில் ஒரு பதிவில் இந்தத் தாக்குதலைக் கண்டித்து.

பத்திரிகையாளர்கள் தங்கள் கடமைகளைச் செய்யும்போது அவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் இது என்று விவரித்தது.

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் எந்தவொரு அழுத்தமும் இல்லாமல் துல்லியமான தகவல்களைப் பெறும் பொதுமக்களின் உரிமையைப் பாதிக்கும் என அவ்வியக்கம் கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset