நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உறுதி செய்ய இலக்கவியல் அமைச்சு தீவிர நடவடிக்கை: கோபிந்த் சிங்

கோலாலம்பூர்:

மக்களிடையே நல்லிணக்கத்தைக் குழைக்கும் செயற்கை நுண்ணறிவு தவறாகப் பயன்பாடுகளை தடுக்க அரசாங்கம் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நாடாளுமன்றத்தில் பதிலில் இதனை கூறினார்.

சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக, குறிப்பாக பொதுத் தேர்தல் காலத்திற்கு முன்னதாக,  மக்களைக் குழப்புவதோடு, சமுதாய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வகையில் , செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை அரசாங்கம் கடுமையாகக் கருதுகிறது.

இந்தத் தவறான செயல்பாடுகளை ஏதிர்கொள்ளவும், இதுபோன்ற சிக்கல்களைச் சமாளிக்கவும், மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு சட்டம் , உள்ளடக்கக் கண்காணிப்பு, இது தொடர்பான பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பல அணுகுமுறையை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது.

அதோடு, செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தொடர்பான சிறப்பு சட்ட மசோதாவை இலக்கவியல் அமைச்சு திட்டமிடும்  வேளையில், செயற்கை நுண்ணறிவு அரசியலமைப்புச் சட்டத்தை இயக்கவும், செயற்கை நுண்ணறிவு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளையும் உள்படுத்திய வரைவு சட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்கவும் சிறப்பு செயற்குழுவை இலக்கவியல் அமைச்சு உருவாக்கியுள்ளது.

2024 சைபர் பாதுகாப்பு சட்டம், 2024  தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் (திருத்தம்), 2024 ஆன்லைன் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் வழி  தற்போதைய சட்டங்களும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனம், பழைய 1997 கணினி பாதுகாப்பு சட்டத்திற்கு பதிலாக, புதிய சைபர் பாதுகாப்புச் சட்ட மசோதாவையும் உருவாக்கி வருகிறது.

பொதுத் தேர்தல் காலம் நெருங்கும் நிலையில், தவறான தகவல்களைப் பரப்புதல், மற்றும் பொதுமக்களின் கருத்துகளை தவறாகச் சித்தரித்து, குழப்பும் அபாயம் அதிகரிப்பதால், இந்தக் கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று தம்பின் நாடாளுமன்ற உருப்பினர், டத்தோ முகமட் இசாம் பின் முகமட் எழுப்பிய கேள்விக்கு கோபிந்த் சிங் டியோ மேற்கண்டவாறு பதிலளித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset