நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,907ஆக உயர்வு

கோலாலம்பூர்:

நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,907ஆக உயர்வு  கண்டுள்ளது.

கனமழையை தொடர்ந்து பல மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாடு முழுவதும் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,907 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 8,308 குடும்பங்கள் அடங்கும். 26 மாவட்டங்களில் 142 வெள்ள நிவாரண மையங்கள் செயல்படுகின்றன.

தேசிய பேரிடர் மேலாண்மை மையம் இன்று காலை 6 மணிக்கு வெளியிட்ட சமீபத்திய சூழ்நிலை அறிக்கையின்படி, எட்டு மாநிலங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன.

கிளந்தான், பெர்லிஸ், பேரா, சிலாங்கூர், கெடா, திராங்கானு, பினாங்கு, பகாங்  என ஒட்டுமொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான அதிகரிப்பைக் காட்டுகிறது.

குறிப்பாக வடக்குப் பகுதிகள், கிழக்கு கடற்கரையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த வெள்ளத்தில் கிளந்தான் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது.

தும்பட், கோத்தா பாரு, பாச்சோக், பாசிர் பூத்தே ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்ட 9,525 பேர் தற்போது 40 வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

தும்பாட் பகுதியில் அதிகபட்சமாக 4,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் அந்தப் பகுதியில் குறைந்து வரும் போக்கு பதிவாகியுள்ளது.

இருப்பினும், கோத்தா பாரு, பாச்சோக், பாசிர் பூத்தே ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என அம்மையம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset