செய்திகள் மலேசியா
பிரதமரின் அரசியல் செயலாளர் பதவியை ஷம்சுல் இஸ்கந்தர் ராஜினாமா செய்தார்
புத்ராஜெயா:
பிரதமரின் அரசியல் செயலாளர் பதவியை தாம் ராஜினாமா செய்வதாக ஷம்சுல் இஸ்கந்தர் அறிவித்துள்ளார்.
இதனை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கொண்ட அவர்,
அந்தக் கடிதம் இன்று காலை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறினார்.
2024 ஆம் ஆண்டு மருத்துவமனை திட்டத்திற்கான ஒப்பந்ததாரருக்கு ஆதரவு கடிதம் வழங்கியதற்காக டத்தோஸ்ரீ அன்வார் தனது அரசியல் செயலாளரை கடுமையாக கண்டித்த ஆறு நாட்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மடானி அரசாங்கத்தின் பிம்பத்தை சேதப்படுத்தும் விஷயங்களால் தன்னைத் தாக்க முயற்சித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஷம்சுல் இஸ்கந்தர் கூறினார்.
எனவே, இந்தத் தாக்குதலில் இருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன்.
பிரதமர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று அவர் அப்பதிவில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 25, 2025, 9:39 pm
விளையாட்டு நிருபர் ஹரேஷ் தியோல் இரண்டு ஆடவர்களால் தாக்கப்பட்டார்
November 25, 2025, 8:32 pm
வீடற்ற ஆடவர் மீது தண்ணீர் ஊற்றிய வீடியோ வைரலானது: ஆம் பேங்க் மன்னிப்பு கோரியது
November 25, 2025, 8:31 pm
செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு உறுதி செய்ய இலக்கவியல் அமைச்சு தீவிர நடவடிக்கை: கோபிந்த் சிங்
November 25, 2025, 2:50 pm
ஆப்பிரிக்காவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பிறகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மலேசியா வந்தடைந்தார்
November 25, 2025, 2:49 pm
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் முதற்கட்ட உதவி: டத்தோஸ்ரீ அமிரூடின்
November 25, 2025, 11:12 am
சபா தேர்தலை முன்னிட்டு 58 முன்கூட்டிய வாக்களிப்பு மையங்கள் இன்று காலை திறக்கப்பட்டன
November 25, 2025, 11:11 am
சிலாங்கூரில் போலிசாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆடவர் உயிரிழந்தார்: டத்தோ குமார்
November 25, 2025, 11:10 am
தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பாடல் திறன் போட்டி: ஈப்போ மெதடிஸ் தமிழ்ப்பள்ளி மாணவி தனுஸ்ஸ்ரீ வாகை சூடினார்
November 25, 2025, 11:09 am
