நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆப்பிரிக்காவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பிறகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் மலேசியா வந்தடைந்தார்

கோலாலம்பூர்:

ஆப்பிரிக்காவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்திற்குப் பிறகு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலேசியா வந்தடைந்தார்.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மூன்று நாடுகளுக்கான தொடர் பயணங்களை பிரதமர் மேற்கொண்டிருந்தார்.

இந்த பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் இன்று காலை 9.15 மணிக்கு நாட்டிற்கு வந்தார்.
இந்த முறை ஆப்பிரிக்க கண்டத்திற்கான மதானி ராஜதந்திர பணி குறிப்பிடத்தக்க முடிவுகளை அளித்ததாகவும், இதனால் உறவுகளை வலுப்படுத்துவதாகவும், புதிய வாய்ப்புகளைத் திறப்பதாகவும், பரஸ்பர நன்மைக்காக மூலோபாய ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதாகவும் அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்தார்.

இந்த உறுதிமொழிகள், ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றையும் மக்களுக்கும் நாட்டிற்கும் உண்மையான செழிப்பைக் கொண்டு வரும் கொள்கைகளாகவும் செயல்களாகவும் மொழிபெயர்க்க வேண்டிய நேரம் இது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset