நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு 500 ரிங்கிட் முதற்கட்ட உதவி: டத்தோஸ்ரீ அமிரூடின்

ஷாஆலம்:

சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 500 ரிங்கிட் உதவி வழங்கப்படும்.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பதிவுசெய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு 750 குடும்பங்களுக்கும் 500 ரிங்கிட் நிவாரண மையங்களுக்கு இடம்பெயர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்.

இந்த விவகாரம் இன்று மாநில ஆட்சிக் குழுவில்  முடிவு செய்யப்பட்டது.

சபாக் பெர்னம், கோலா சிலாங்கூர், உலு லங்காட், பெட்டாலிங், கிள்ளான் ஆகிய ஐந்து மாவட்டங்களைத் தாக்கிய வெள்ள சம்பவத்தைத் தொடர்ந்து இன்று சிறப்புக் கூட்டத்தை நடத்தியது.

இன்று காலை 11:30 மணி நிலவரப்படி, ஐந்து மாவட்டங்களில் உள்ள 21 வெள்ள நிவாரண மையங்களில் மொத்தம் 2,784 பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் 750 குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset