செய்திகள் இந்தியா
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
புதுடெல்லி:
காற்று தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ.) 6 வகைகளாக தரம் பிரிக்கப்பட்டிருக்கிறது. 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51-100 புள்ளிகள் இருந்தால் மிதமானது.
101 முதல் 150 புள்ளிகள் இருந்தால் நோயாளிகளின் உடல்நலத்துக்கு தீங்கானது. 151 முதல் 200 புள்ளிகள் வரை இருந்தால் ஆரோக்கியமான மக்களின் உடல் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும். 201 முதல் 300 வரை இருந்தால் மக்களின் உடல்நலனுக்கு அதிக தீங்கினை விளைவிக்கும். 301 முதல் 500 வரை இருந்தால் மிகவும் அபாயகரமானதாகும்.
டெல்லியில் இன்று காற்று மாசு அளவு 450 புள்ளிகளாக இருந்தது. கடந்த சில வாரங்களாக இதே நிலை நீடிக்கிறது.
இந்த சூழலில் டெல்லியில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 50% ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற டெல்லி அரசு உத்தரவிட்டது.
பள்ளிகள், கல்லூரிகளில் திறந்தவெளி மைதானத்தில் மாணவ, மாணவியர் விளையாட ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 24, 2025, 7:12 pm
அமெரிக்க விசா கிடைக்காததால் ஹைதராபாத் பெண் மருத்துவர் தற்கொலை
November 24, 2025, 3:08 pm
இந்தியத் தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது
November 22, 2025, 6:54 pm
கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்
November 21, 2025, 11:01 am
பண மோசடி வழக்கு: அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.1,400 கோடி சொத்துகள் முடக்கம்
November 20, 2025, 10:27 pm
பிஹார் முதல்வராக 10ஆவது முறையாக பதவியேற்ற நிதிஷ் குமார்: அமைச்சர்கள் யார் யார்?
November 19, 2025, 4:47 pm
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது: அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு
November 19, 2025, 2:07 pm
இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல், கார்கே, சோனியா மரியாதை
November 18, 2025, 5:58 pm
மனைவியைப் பணயமாக வைத்து சூதாடிய கணவன்: தோற்றதால் எட்டு பேருக்கு பங்கு வைத்த கணவன் கைது
November 17, 2025, 3:54 pm
