செய்திகள் இந்தியா
பண மோசடி வழக்கு: அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.1,400 கோடி சொத்துகள் முடக்கம்
மும்பை:
பண மோசடி வழக்கில் ரிலையன்ஸ் குழுமத் தலைவா் அனில் அம்பானிக்குச் சொந்தமான மேலும் ரூ. 1,400 கோடி மதிப்பிலான சொத்துகளை இந்திய அமலாக்கத் துறை முடக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஏற்கெனவே, இவருக்குச் சொந்தமான ரூ. 7,500 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன.
பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரிலையன்ஸ் வீட்டுக் கடன் நிதி நிறுவனம் (ஆா்ஹெச்எஃப்எல்), ரிலையன்ஸ் வா்த்தகக் கடன் நிதி நிறுவனம் (ஆா்சிஎஃப்எல்) ஆகிய நிறுவனங்களின் மூலம் ஈட்டப்பட்ட பொது நிதியில் பண முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2017-2019 வரை ஆா்ஹெச்எஃப் நிறுவனத்தில் ரூ.2,965 கோடியும் ஆா்சிஎஃப் நிறுவனத்தில் ரூ.2,045 கோடியும் எஸ் வங்கி முதலீடு செய்தது. ஆனால், இந்த இரண்டு தொகையும் 2019-இல் வாராக் கடனாக மாறியது.
செபியின் கட்டுப்பாடுகளால் சட்டரீதியாக ரிலையன்ஸ் நிப்பான் பங்கு பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) மூலம் ரிலையன்ஸ் குழுமத்தில் முதலீடுகள் மேற்கொள்ள முடியாது. அதன் காரணமாக, எஸ் வங்கியைப் பயன்படுத்தி ரிலையன்ஸ் நிப்பான் பங்கு பரஸ்பர நிதி மேற்கூறிய இரு நிறுவனங்களுக்கும் கடன் வழங்கியிருப்பது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது.
இதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே, அனில் அம்பானிக்குச் சொந்தமான மொத்தம் ரூ.9,000 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 7, 2026, 11:50 am
விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயற்சி செய்த கேராளவைச் சேர்ந்த நபர் கைது
August 7, 2026, 9:51 am
பாலியல் பலாத்கார வழக்கில் தெஹெல்கா நிறுவனர் குற்றவாளி எனத் தீர்ப்பு: பத்தாண்டு சிறை
August 4, 2026, 5:55 pm
பிரசாந்த் கிஷோர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்
August 4, 2026, 12:20 pm
2030-ல் அஹமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான கொடி இந்தியாவிடம் ஒப்படைப்பு
August 3, 2026, 6:23 pm
வங்கிக் கணக்கில் ரூ. 100 கோடி: எரிவாயு மானியம் சரிபார்த்த பெண் அதிர்ச்சி
August 3, 2026, 6:17 pm
கேரளத்தில் திடீர் நிலச்சரிவு: மக்கள் நூலிழையில் உயிர் தப்பினர்
August 2, 2026, 11:22 am
கேரளாவில் கடும்கனமழையில் 6 பேர் உயிரிழந்தனர்; பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
July 30, 2026, 11:43 am
அஸ்ஸாம் வெள்ளம்: உயிரிழப்பு 75-ஆக அதிகரிப்பு
July 29, 2026, 10:47 pm
