செய்திகள் இந்தியா
பிஹார் முதல்வராக 10ஆவது முறையாக பதவியேற்ற நிதிஷ் குமார்: அமைச்சர்கள் யார் யார்?
பாட்னா:
பிஹார் முதல்வராக 10-ஆவது முறையாக நிதிஷ் குமார் இன்று பதவியேற்றுக்கொண்டார். அவரது அமைச்சரவையில் இரண்டு துணை முதல்வர்கள் உள்பட 26 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
நிதிஷ் குமார் அமைச்சரவையில் கடந்த முறை துணை முதல்வராக இருந்த பாஜகவின் சாம்ராட் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் இம்முறையும் துணை முதல்வர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாஜகவைச் சேர்ந்த மங்கல் பாண்டே, திலிப் ஜெய்ஸ்வால், நிதின் நபின், ராம் கிரிபால் யாதவ், சஞ்சய் சிங் டைகர், அருண் சங்கர் பிரசாத், சுரேந்திர மேத்தா, நாராயண் பிரசாத், ரமா நிஷாத், லகேந்திர குமார் ரோஷன், ஸ்ரேயாசி சிங், பிரமோத் குமார் ஆகிய 14 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இதன்மூலம், நிதிஷ் குமார் அமைச்சரவையில் அதிகபட்சமாக பாஜகவின் 14 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த விஜய் குமார் சவுத்ரி, பிஜேந்திர பிரசாத் யாதவ், ஷ்ரவன் குமார், அஷோக் சவுத்ரி, லேசி சிங், மதன் சாஹ்னி, சுனில் குமார், முஹம்மது ஜமா கான் ஆகிய 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) கட்சியின் சஞ்சய் குமார் சிங், சஞ்சய் குமார் ஆகிய இருவரும், இந்துஸ்தானி அவாமி மோர்ச்சாவைச் சேர்ந்த சந்தோஷ் குமார் சுமன் என்பவரும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சாவின் தீபக் பிரகாஷும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இதன்மூலம், பாஜக 14, ஐக்கிய ஜனதா தளம் 8, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 2, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா - 1, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா - 1 என மொத்தம் 26 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 23, 2026, 5:16 pm
ஆட்டோ ஓட்டி வாழ்வாதாரத்தை வெல்லும் வீர மங்கையர்கள்
March 20, 2026, 8:29 pm
வரலாறு காணாத ரூபாய் வீழ்ச்சி
March 20, 2026, 10:12 am
மேற்காசிய போர் சூழல் குறித்து மலேசிய பிரதமருடன் மோடி உரையாடல்
March 19, 2026, 10:18 pm
எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்: இந்தியா கடும் எதிர்ப்பு
March 18, 2026, 5:29 pm
ஆந்திராவில் பரபரப்பு: காதலிக்கு எச்.ஐ.வி. பரப்பிய காதலன் கைது
March 18, 2026, 5:27 pm
திருநங்கை சட்டத்திருத்ததில் கடும் சர்ச்சை: மசோதாவிற்கு எதிராக பலர் எதிர்ப்பு
March 18, 2026, 4:48 pm
டாக்டர் வந்தனா கொலை வழக்கில் நீதி நிலைநிறுத்தப்பட்டது
March 18, 2026, 3:05 pm
