நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சமூக வலையமைப்புகளின் கூட்டமைப்பு (PGRM) தகுதியானவர்களுக்கு விருது வழங்கி வரலாறு படைத்தது

ஈப்போ:

2025 ஆம் ஆண்டில் சமூக வலையமைப்புகளின் கூட்டமைப்பு (PGRM) தனது சொந்த வரலாற்றைப் படைத்தது. முதன்முறையாக பி ஜி ஆர் எம்( PGRM) வருடாந்திர விருது விழா 2025-ஐ ஏற்பாடு செய்தது. நாடு முழுவதிலும் உள்ள சிறந்த தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு கௌரவமான விருது விழாவாக இது அமைந்தது.

பேராக்கின் ஈப்போவில் நடைபெற்ற இந்த விழா சிறப்பான வரவேற்பைப் பெற்றது. மேலும் தொழில்முறை, மனிதநேயம், கல்வி, தொழில்முனைவோர், சமூக மேம்பாடு ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்கள், அமைப்புகளைக் கௌரவிப்பதற்கான ஒரு முக்கியமான தளமாக இது அமைந்தது.

டத்தோ இன்ஜினியர் TS கமாருல் ஆஃபே ஹாஜி அஹ்மத்துக்கு புமிபுத்ரா வணிக சிறப்பு விருதும்
டாக்டர் வோங் டாட் ஹௌவுக்கு – சுகாதார வீரர் விருதும்
· வழக்கறிஞர் விகினேஷ் சங்கருக்கு சட்ட சின்ன விருதும்
·உலகநாதன் முத்தையாவுக்கு வாழ்நாள் மனிதநேய சிறப்பு விருது. வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

· புவான் ரஸ்னிதா பின்தி ஜுஸோவுக்கு இரும்பு மனிதப்பெண் விருதும்
ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி பெண்கள் U12 கால்பந்து பயிற்சியாளர்
புவான் பவானி ராஜசேகருக்கு முன்னோடி பயிற்சியாளர் விருது.
·PERTAMA (மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவை) – தமிழ்ப்பள்ளிகளின் காவலர் விருதும்
· பேராக் நேசக்காரங்கள் சங்கம் – மனிதநேயத்தின் ஒளி விருதும்
· ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளியின் PIBG, LPS, ALUMNi கூட்டமைப்பைச் சார்ந்த ஜெயசீலன் ராஜு, ராஜ் குமார்,  விஜய்  வேலாயுதம் ஆகியோருக்கு முப்படைத் சிறந்த தலைவர்கள் முன்மாதிரி ஒற்றுமை விருதும் புந்தோங் சகோதரர்கள் – அனுக்ரஹ் ஜிவா பிரிஹத்தின் விருதும் (பரோபகார சேவை விருது) புவான் ஹர்சுந்தர்ஜித் கௌருக்கு முன்னோடி பெண் தொழில்முனைவோர் விருதும் விக்னேஷ் தில்லை வருடத்தின் தொழில்முனைவோர் விருதும் டாக்டர் முஹம்மது கமால் பின் அப்துல்லாஹ்வுக்கும் தேசியத் தூதர், சர்வதேச இளைஞர் சங்கத்தின் டாக்டர் விஸ்வநாதன் பாலனிவேலு மாநில ஒருங்கிணைப்பாளர் (சிலாங்கூர்), சர்வதேச இளைஞர் சங்கம் ஆகியோருக்கும் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

புவான் அம்பிகா கிருஷ்ணன் (ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியை) – அனுக்ரஹ் ஜாஸா எமாஸ் (தங்க சேவை விருது)
திவான் பாபு சிறந்த நீர்வள ஆக்கபூர்வமான விருது, நாகராஜன் மனோகரன் – சிறந்த வேலை நெறி விருது, சந்தானமாரி ஜான் சூசைநாதன், அதிசய பெண் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

PGRM ஏற்பாடு செய்த முதல் நிகழ்வாக, இந்த விழா பல்வேறு பின்னணியில் இருந்து தலைவர்களை வெற்றிகரமாக ஒன்றிணைத்தது மட்டுமல்லாமல், அங்கீகாரத்தின் மூலம் சமூகத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஒரு புதிய அத்தியாயத்தையும் திறந்து வைத்தது.

சமூக வலையமைப்புகளின் கூட்டமைப்பு (PGRM) இந்த விழாவை எதிர்காலத்தில் இன்னும் கௌரவமான வருடாந்திர நிகழ்வாக மாற்றுவதற்கும், அதே நேரத்தில் மேலும் பல சமூக போராளிகளை தேசிய மேடைக்கு உயர்த்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது என்று அமைப்பின் தலைவர் முஹம்மத் கூறினார்.

PGRM விருதுகளை வெற்றிகரமாக நடத்துவதில் ஆதரவை வழங்கிய  அனைவருக்கும் PERTAMA (மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவை), PERTAMA பேராக், ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளியின் Gabungan AlUMNI,PIBG, LPS தங்கள் நன்றியைப் பதிவு செய்தனர்.

- ஆர். பாலச்சந்தர்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset