நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேலை அனைத்துலக நீதித்துறை அமைப்புகளுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு மலேசியா தொடர்ந்து ஆதரவளிக்கும்: ஹசான்

கோலாலம்பூர்:

இஸ்ரேலை அனைத்துலக நீதித்துறை அமைப்புகளுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு  மலேசியா தொடர்ந்து ஆதரவளிக்கும்.

வெளியுறவுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை கூறினார்.

சர்வதேச நீதிமன்றங்களில் இஸ்ரேலை நீதிக்கு முன் நிறுத்தும் முயற்சிகளுக்கு மலேசியா தொடர்ந்து ஆதரவளிக்கும்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, அரபு லீக், பிற சர்வதேச அமைப்புகளுடன் கூட்டு முயற்சிகள் செயல்படுத்தப்பட வேண்டும்.

இஸ்ரேலின் சட்டவிரோத செயல்களுக்கு கடுமையான மற்றும் பயனுள்ள தண்டனை கிடைப்பதை உறுதி செய்வதற்காக இது என்று கூறினார்.

செப்டம்பர் 15 அன்று கட்டாரின் டோஹாவில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகள், அரபு லீக்கின் அவசர உச்சிமாநாட்டின் போது, ​​பிரதமரும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள், தொடர்ச்சியான அட்டூழியங்களை ஒருமனதாக கண்டித்தனர்.

மேலும் சர்வதேச அளவில் அவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்று கோரினர் என டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் குறிப்பிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset