நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிரம்பான் செண்டாயானில் உள்ள உணவகத்தில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான்:

சிரம்பான் செண்டாயானில் உள்ள உணவகத்தில் ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சிரம்பான் மாவட்ட போலிஸ் தலைவர் அசாஹர் அப்துல் ரஹ்மான் இதனை கூறினார்.

இங்குள்ள நுசாரி பிஸ் செண்டாயானில் உள்ள ஒரு உணவகத்தில் நேற்று இரவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு வந்த பொதுமக்களில் ஒருவரின் கூற்றுப்படி,

சம்பவத்திற்கு முன்பு பாதிக்கப்பட்டவர் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகவும், பின்னர் இரண்டு வாகனங்கள் அவரை நெருங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டதும், பாதிக்கப்பட்டவர் பாதிக்கப்பட்டவர் சாலையின் மறுபுறம் ஓடி சரிந்து விழுந்துள்ளார் என தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து போலிஸ் தரப்பினருக்கு இரவு 11.23 மணிக்கு தகவல் கிடைத்தது.

வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.

மேலும் கூடுதல் விசாரணை விவரங்களை நாங்கள் ஊடகங்களுக்குத் தெரிவிப்போம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset