நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2025 ஹஜ் யாத்திரையை தங்கள் நிதி நெருக்கடி காரணமாக 50 சதவீத யாத்ரீகர்கள் நிராகரித்துள்ளனர்: அமைச்சர் நயீம்

கோலாலம்பூர்:

2025ஆம் ஆண்டு ஹஜ்ஜுக்கான பயண வாய்ப்பை தங்களுடைய நிதி நெருக்கடி காரணமாக  50 சதவீத யாத்ரீகர்கள் நிராகரித்துள்ளனர்.

பிரதமர் துறையின் மத விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ டாக்டர் முஹம்மத் நயிம் மொக்தார் இதனைக் கூறினார்.

இந்த ஆண்டு இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையை நிறைவேற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட யாத்ரீகர்களில் மொத்தம் 50 சதவீதம் பேர் தங்களிடம் போதிய பணம் இல்லாததால் இந்த வாய்ப்பை நிராகரித்ததாக அமைச்சர் கூறினார்.

இந்த சலுகை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் சம்பந்தப்பட்ட யாத்ரீகர்கள் எதிர்கொள்ளும் நிதி சிக்கல்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

9.7 மில்லியன் தாபோங் ஹாஜி வைப்புத்தொகையாளர்களில் 53 சதவீதம் பேர் 1,300 ரிங்கிட்டுக்கும் குறைவான சேமிப்புகளையே கொண்டுள்ளனர்.

இந்த சூழ்நிலையின் அர்த்தம், 1,300 ரிங்கிட்டுக்கும் குறைவான சேமிப்புகளைக் கொண்ட வைப்புத்தொகையாளர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள இயலாது.

ஏனெனில் சம்பந்தப்பட்ட தொகை அந்த நோக்கத்திற்கு அவர்களது பயணத்திற்கு போதுமானதாக இல்லை என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset