நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ள நீர் மோதியதால் பாலம் இடிந்து விழுந்தது: 3,000 பூர்வக்குடி மக்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது

குவா மூசாங்:

பெரலாங் ஆற்றின் குறுக்கே இருந்த மரப் பாலம் இடிந்து விழுந்ததில் அப்பகுதியில் வசிக்கும் 3,000க்கும் மேற்பட்ட பூர்வக் குடி மக்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மாலையில் இருந்து பெய்த கனமழை காரணமாக வெள்ள நீர்  அதிகரித்ததால் மாலை 7 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, போஸ் டோஹோய், போஸ் சிம்போர், போஸ் கோப் ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் இப்போது தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற முடியவில்லை என்று 37 வயதான டெண்டி ஜோஹாரி என்ற குடியிருப்பாளர் கூறினார்.

சம்பவம் குறித்து ஒரு நண்பர் மாலை 7 மணியளவில் எனக்குத் தெரிவித்தார்.

மரப் பாலம் இப்போது துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து வாகனங்களும் அதைக் கடந்து செல்ல முடியாது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset