நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நீதிமன்றம் 4.1 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்த பிறகு அடாம் ரட்லான் காணாமல் போனார்: அசாம் பாக்கி

புத்ராஜெயா:

நீதிமன்றம் 4.1 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்த பிறகு அடாம் ரட்லான் காணாமல் போனார்.

எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி இதனை கூறினார்.

அதிகாரிகளால் தேடப்படும் செகாம்புட் பிரிவு பெர்சத்து துணைத் தலைவர் அடாம் ரட்லான் ஆடம் முஹம்மது, நீதிமன்றத்தால் 4.1 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் காணாமல் போனதாக நம்பப்படுகிறது.

மேலும் நீதிமன்றத்தின் தண்டனைக்குப் பிறகு அடாம் ரட்லான் வெளிநாடு செல்ல சுதந்திரமாக இருப்பதாக அவர் கூறினார்.

இருப்பினும் அடாம் ரட்லான் எங்கு செல்கிறார் என்பதை இதுவரை அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை.

ஜான விபாவா திட்டம் தொடர்பாக அவர் முன்பு விசாரிக்கப்பட்டார்.

நீதிமன்றம் அவருக்கு 4.1 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்த பிறகு அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.
அவரின் கடப்பிதழின் நிலை குறித்து குடிவரவுத் துறையுடன் எம்ஏசிசி விவாதங்களை நடத்தியதாக  டான்ஸ்ரீ அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset