நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது: அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு 

புதுடெல்லி:

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, அடுத்த இரண்டு நாள்களில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்-கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது.

வங்கக்கடலில் நவம்பர் 22இல் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, நவம்பர் 24 காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியால் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் நவ. 21, 22இல் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது கடலோர காவேரி படுகை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset