செய்திகள் இந்தியா
100 தோப்புக்கரணம் போட்டதால் 6 வகுப்பு மாணவி மரணம்
மும்பை:
இந்தியாவில் 100 தோப்புக்கரணம் போட்டதால் 6 வகுப்பு மாணவி மரணமடைந்தார்.
மகாராஷ்டிர மாநிலம், வசாய் நகரில் ஸ்ரீ ஹனுமந்த் வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளி உள்ளது.
இங்கு 6ஆம் வகுப்பு படிக்கும் காஜல் கோண்ட் (12) நேற்று முன்தினம் பள்ளிக்கு 10 நிமிடம் தாமதமாக வந்துள்ளார்.
இதனால் அந்த சிறுமிக்கு தோளில் புத்தகப் பையுடன் 100 முறை தோப்புக் கரணம் போடுமாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த சிறிது நேரத்தில் சிறுமிக்கு கீழ் முதுகில் கடுமையான வலி ஏற்படத் தொடங்கியது
இதனால் வீடு திரும்பிய சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிறகு அவர் மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிறுமி நேற்று உயிரிழந்தார்.
குழந்தைகள் தினத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர், பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 17, 2025, 3:54 pm
உம்ராவிற்குச் சென்ற 42 இந்தியர்கள் சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்
November 16, 2025, 10:54 am
114 வயதில் காலமான மரங்களின் தாய் என்றழைக்கப்பட்ட திம்மக்கா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
November 14, 2025, 11:31 am
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நிலவரம்
November 13, 2025, 9:09 pm
வீடு கட்டித் தருவதாக ரூ.14,599 கோடி மோசடி: ரியல் எஸ்டேட் நிறுவனர் கைது
November 13, 2025, 7:26 am
மோடி பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ்
November 11, 2025, 5:19 pm
தர்மேந்திராவை சாகடித்த விவஸ்தைகெட்ட ஊடகங்கள்
November 10, 2025, 11:04 pm
BREAKING NEWS: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்தனர்
November 9, 2025, 5:59 pm
