நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மஇகாவின் பேராளர் மாநாட்டில் 4 மூத்த தலைவர்களுக்கு சிறந்த சேவையாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது

ஷாஆலம்:

மஇகாவின் பேராளர் மாநாட்டில் 4 மூத்த தலைவர்களுக்கு சிறந்து சேவையாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மஇகாவின் 79ஆவது தேசிய பொதுப் பேரவை இன்று ஷாஆலம் ஐடிசிசி மண்டபத்தில் நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் முக்கிய அங்கமாக மஇகாவின் நான்கு மூத்த தலைவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் சேவை, அர்பணிப்புக்கான மஇகாவின் தோற்றுநர் ஜோன் தீவி விருது டான்ஸ்ரீ குமரனுக்கு வழங்கப்பட்டது.

சேவை, வருங்கால தலைமைத்துவத்திற்கான துன் வீதி சம்பந்தன் விருது டான்ஸ்ரீ பேராசிரியர் மாரிமுத்துவுக்கு வழங்கப்பட்டது.

டான்ஸ்ரீ வி. மாணிக்கவாசகம் தேச கட்டுமான விருது டத்தோ கேஎஸ் பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.

உச்சக்கட்டமான  துன் சாமிவேலு வாழ்நாள் சாதனையாளர் விருது டத்தோ எம். செல்லதேவனுக்கு வழங்கப்பட்டது.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சரவணன் ஆகியோர் அவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset