நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிங்க் நிற பேருந்துடன் மோதியதில் ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுநர் உயிரிழந்தார்

மலாக்கா:

பிங்க் நிற பேருந்துடன் மோதியதில் ஸ்போர்ட்ஸ் கார் ஓட்டுநர் மரணமடைந்தார்.

இந்த சம்பவம் இன்று காலை இங்குள்ள ஜாலான் க்ருபோங்–சுங்கை படாவில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் நிகழ்ந்தது.

இதில் ஆடவர் ஓட்டிச் சென்ற ஸ்போர்ட்ஸ் கார் பேருந்துடன் பயங்கரமாக மோதியது. இதில் அவ்வாடவர் உயிரிழந்தார்.

செங் தீயணைப்பு, மீட்பு நிலைய செயல்பாட்டுத் தளபதி முஹம்மத் நோர்ஸ்யா சாலே, விபத்து குறித்து தனது துறைக்கு காலை 7.40 மணிக்கு தகவல் கிடைத்ததாகக் கூறினார்.

உடனே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

34 வயது பேருந்து ஓட்டுநரும், 26 வயது கார் ஓட்டுநர் என இருவரும் ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்டனர்.

அவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.

காயமடைந்த பேருந்து ஓட்டுநர் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். 

கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது  என்று அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset