நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடு முழுவதும் கனமழை மழை பெய்யும்; பலத்த காற்று வீசும் அபாயம்: மெட் மலேசியா எச்சரிக்கை

கோலாலம்பூர்:

சீரற்ற வானிலை நவம்பர் 22 வரை நீடிக்கும் என்பதால் மலேசியர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மலேசிய வானிலை மையமான மெட் மலேசியா அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய வானிலை ஆய்வில் அதிக அளவில் ஈரப்பதத்தைக் காட்டுகின்றன. இது தற்போதைய மழைக்காலத்தை நீடிக்க வாய்ப்புள்ளது என்று  மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

நவம்பர் 19 முதல் கிழக்கு, வடக்கு தீபகற்பத்தில் காற்று ஒன்றிணையும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை, கடுமையான மழை, பலத்த காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், மெட்மலேசியா, அதன் டிஜிட்டல் தளங்களில் இருந்து சரிபார்க்கப்பட்ட தகவல்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset