நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இதனால் தான் நான் கோபப்படுகிறேன்; நாட்டிற்குள் போதைப் பொருட்களைக் கடத்தும் ஒரு பெரிய கும்பல் உள்ளது: பிரதமர் அன்வார்

கோத்தா கினபாலு:

கடந்த 20 ஆண்டுகளாக நாட்டிற்குள் போதைப்பொருள் கடத்தும் ஒரு பெரிய கும்பல் உள்ளது.

ஆனால் இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நான்  பிரதமராகி ஒரு வருடமாகி விட்டது. இருந்த போதிலும் ஒரு பெரிய கும்பல் கொள்கலன்கள் வழியாக போதைப்பொருட்களை கொண்டு வருவதாக எந்த தகவலும் வரவில்லை.

இது குறித்து பலர்  பேசிக்கொண்டிக்கின்றனர்.

ஆக பொறுப்பான நிறுவனத்திடமும் இந்தப் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்புகிறேன்.

மக்கள் ஏற்கனவே அதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். பின்னர் கொள்கலன் உள்ளே வந்தது. 

அதன் பின் போதைப்பொருள் கொள்கலன் போர்ட் கிள்ளானின் இருந்து வெளியே போனது. பின் ஆஸ்திரேலியாவில் பிடிபட்டது.

இதனால் தான் எனக்கு கோபம் வருகிறது இன்று சபா ஊடகங்களுடனான  அமர்வில் அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset