நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடாம் ரட்லான் வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது; அவர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும்: அசாம் பாக்கி எச்சரிக்கை

புத்ராஜெயா:

அடாம் ரட்லான் வெளிநாட்டில் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆக அவர் உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என்று எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேக்ஸ் 2 நெடுஞ்சாலை திட்டம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த விசாரணைக்கு உதவுவதற்காக தேடப்படும் சிகாம்புட் பிரிவு பெர்சத்து துணைத் தலைவர் அடாம் ரட்லான் வெளிநாட்டில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து 44 வயதான அந்த அரசியல்வாதியின் இருப்பிடத்தைக் கண்டறிய குடிவரவுத் துறையுடன் ஒத்துழைப்பு விரைவில் ஏற்படுத்தப்படும்.

அவர் வெளிநாட்டில் இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

குடியேற்றத் துறையுடன் விரைவில் ஒத்துழைப்பு வழங்கப்படும். மிக முக்கியமான விஷயம் அவர் இருக்கும் இடம்.

விசாரணையில் உதவ உடனடியாகத் திரும்புமாறு எம்ஏசிசி அவரைக் கேட்டுக் கொள்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset