செய்திகள் மலேசியா
புளூ வாட்டர் தோட்டத்தில் இந்திய பெண் கொலை வழக்கில் நாளை இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்படும்
செர்டாங்:
புளூ வாட்டர் தோட்டத்தில் இந்திய பெண் கொலை வழக்கில் நாளை இரண்டு பேர் மீது குற்றம் சாட்டப்படும்.
செர்டாங் மாவட்ட போலிஸ் தலைவர், முஹம்மது ஃபாரித் அஹ்மது இதனை கூறினார்.
கடந்த அக்டோபர் 29ஆம் தேதி ஸ்ரீ கெம்பங்கானில் உள்ள புளூ வாட்டர் தோட்டத்தில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இளம் பெண் இறந்து கிடந்தார்.
இப்பெண் விற்பனையாளரின் கொலை தொடர்பாக இரண்டு ஆண்கள் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார்கள்.
விசாரணை ஆவணங்கள் சிலாங்கூர் பொது வழக்குரைஞர் இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இரண்டு சந்தேக நபர்கள் மீது குற்றஞ்சாட்ட அவரது தரப்பினருக்கு அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக கூறினார்.
20 வயதுடைய இரண்டு உள்ளூர் ஆண்கள் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 உடன் சேர்த்து வாசிக்கப்படும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34 இன் கீழ் குற்றம் சாட்டப்படும்.
குற்றச்சாட்டு நாளை காலை 8 மணிக்கு பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2025, 11:02 pm
மலேசியத் தமிழ்ப் பள்ளி முன்னாள் மாணவர் சங்கப் பேரவைத் தலைவர் டத்தோ ஆர்.ஆர்.எம். கிருஷ்ணன் காலமானார்
November 16, 2025, 9:57 pm
மஇகா இன்று முடிவெடுக்காததற்கு அமைச்சரவை மாற்றமும், சபா தேர்தலும் காரணமா?: கட்சி வட்டாரம்
November 16, 2025, 8:08 pm
நாடு முழுவதும் கனமழை மழை பெய்யும்; பலத்த காற்று வீசும் அபாயம்: மெட் மலேசியா எச்சரிக்கை
November 16, 2025, 6:45 pm
பேராக் அரசாங்கத்தின் ஏற்பாட்டில் முதல் முருகன் மாநாட்டில் இளைஞர்கள் பங்கேற்றது மிகச் சிறப்பு: டத்தோ சிவநேசன்
November 16, 2025, 2:28 pm
