நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய முன்னணியா, தேசியக் கூட்டணியா?; டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையிலான அடுத்த மத்திய செயலவை முடிவு செய்யும்: டத்தோஸ்ரீ சரவணன்

ஷாஆலம்:

தேசிய முன்னணியா, தேசியக் கூட்டணியா என்பது குறித்து கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையிலான அடுத்த மத்திய செயலவை முடிவு செய்யும்.

மஇகாவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன்  இதனை கூறினார்.

மஇகாவின் 79ஆவது பேராளர் மாநாடு இன்று நடைபெற்றது.

கட்சி, சமுதாயத்தின் நலன் கருதி கட்சி எடுக்க வேண்டிய முடிவு குறித்து இன்று காலை முதல் மாலை வரை விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக மஇகா தேசிய முன்னணியில் இருந்து வெளியேற வேண்டும்.

அதே வேளையில் தேசியக் கூட்டணியில் இணைய வேண்டும் என அனைற்று பேராளர்களும் ஒருமித்த கருத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் இவ்விவகாரத்தில் கட்சி தலைமைத்துவம் எடுத்தவுடன் முடிவு எடுக்க முடியாது.

காரணம் பேராளர்களின் கருத்தையும் கோரிக்கைகளையும் நாம் முழுமையாக ஆராய வேண்டும்.

இதனால் இவ்விவகாரத்தில் முடிவு எடுக்கும் அனைத்து அதிகாரமும் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், மத்திய செயலவைக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது.

மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து பேராளர்களும் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டனர்.

ஆக தேசியக் கூட்டணி குறித்த முடிவு அடுத்த மத்திய செயலவை முடிவு செய்யும்.

பேராளர்களின் தீர்மானத்தை வாசித்து ஒப்புதல் பெற்ற டத்தோஸ்ரீ சரவணன் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset