நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திரா காந்திக்கு ஆதரவாக மஇகா களமிறங்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

ஷாஆலம்:

மகளை மீட்க போராடி வரும் இந்திரா காந்திக்கு ஆதரவாக மஇகா களமிறங்கும்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.

மகள் பிரசன்னாவை மீட்க வேண்டும் என்பதற்காக இந்திரா காந்தி பல ஆண்டுகளாக போராடி வருகிறார்.

குறிப்பாக மகளுடன் தலைமறைவாக இருக்கும் முஹம்மத் ரிட்சுவானை போலிசார் கண்டுப் பிடிக்க வேண்டும் என அவர் நீதி போராட்டமும் நடத்தி வருகிறார்.

ஆனால் இன்று வரை அவர்களை போலிசாரால் கண்டுப்பிடிக்க முடியவில்லை.

இதன் அடிப்படையாக கொண்டு வரும் நவம்பர் 22ஆம் தேதி இந்திரா காந்தி தலைநகரில் பேரணி ஒன்றை நடத்தவுள்ளார்.

சோகோ பேரங்காடியில் இருந்து புக்கிட் அமானை நோக்கி அவர் நடந்து செல்லவுள்ளார்.

இந்திரா காந்திக்கு மஇகா முழு ஆதரவை வழங்கும்.

குறிப்பாக மஇகா மகளிர் பிரிவினர் இந்த பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மஇகா மாநாட்டில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset