நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

114 வயதில் காலமான மரங்களின் தாய் என்றழைக்கப்பட்ட திம்மக்கா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

பெங்களூரு: 

கர்​நாடக மாநிலம், தும்கூர் மாவட்​டம் குப்​பியை அடுத்​துள்ள குனிகலை சேர்ந்​தவர் சாலுமரத திம்​மக்​கா(114). திரு​மண​மாகி குழந்தை பாக்​கி​யம் அமை​யாத​தால் தனது கணவருடன் இணைந்து கர்​நாடக மாநிலம் முழு​வதும் பயணம் செய்து லட்​சக்​கணக்​கான மரங்​களை நட்​டார்.

இதனால் மரங்​களின் தாய் என சாலுமரத திம்​மக்கா அழைக்​கப்​பட்​டார். 

இவரது சேவைக்காக கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ விருது, மத்​திய அரசு பத்​மஸ்ரீ விருது வழங்​கி​யுள்​ளது.

முது​மை​யின் காரண​மாக திம்​மக்கா பெங்​களூரு​வில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் நேற்று முன்​தினம் கால​மா​னார். 

இதைத்​தொடர்ந்து கலா கிராமத்​தில் முழு அரசு மரி​யாதை​யுடன் திம்​மக்​கா​வின் உடல் நல்​லடக்​கம் செய்​யப்​பட்​டது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset