நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபா வருவாய் விவகாரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத முடிவை தேசிய முன்னணி வரவேற்கிறது: ஜாஹித்

கோலாலம்பூர்:

சபா வருவாய் விவகாரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத முடிவை தேசிய முன்னணி வரவேற்கிறது.

துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.

சபாவின் அரசியலமைப்பு உரிமையான கூட்டரசு வருவாயில் 40% மாநிலத்திலிருந்து வசூலிக்கப்படுவதை உறுதிசெய்த கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் கடந்த மாதம் வழங்கிய தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத மத்திய அரசின் முடிவை தேசிய முன்னணி வரவேற்கிறது.

மேல்முறையீடு செய்யாத முடிவு சபா மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிறது.

மேலும்  கூட்டரசு கொள்கைகளுக்கு ஏற்ப இது இருப்பதாக அவர் கூறினார்.

தேசிய முன்னணி எப்போதும் மக்களின் நலனுக்காகப் போராடுகிறது.
மேலும் மாநிலங்களுக்கான அனைத்து மத்திய அரசின் உறுதிமொழிகளும் நியாயமாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset