நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மோடி பட்டப்படிப்பு தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலைகழகத்திற்கு நோட்டீஸ்

புதுடெல்லி: 

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு ஆவணங்களை வெளியிடுமாறு டெல்லி பல்கலைகழகத்திற்கு உத்தரவிட்ட ஒன்றிய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்வதாக டெல்லி உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து தகவல் உரிமை ஆர்வலர் நீரஜ் உள்ளிட்டோர் டெல்லி உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தனர். 

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த மேல்முறையீடுகளை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 

மேல்முறையீடு செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னிப்பு கோரும் மனுக்களுக்கு டெல்லி பல்கலைகழகம் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் நேற்று உத்தரவிட்டனர்.

மோடி எந்தப் பல்கலைக்கழகத்திற்கும் சென்று படித்ததில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக சொல்லப்படுகிறது.

பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தொலைக்காட்சி நடிகையுமான ஸ்மிரிதி இரானியும் தனது பட்டப் படிப்பு குறித்து பொய்த் தகவல் வழங்கிய குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset