நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்த ஆண்டு 55 மலேசியர்கள் போதைப்பொருள் கழுதைகள் என வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டனர்: ஹுசைன் ஒமார் கான்

கோலாலம்பூர்:

இந்த ஆண்டு 55 மலேசியர்கள் போதைப்பொருள் கழுதைகள் என வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டனர்.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குநர் ஹுசைன் ஒமார் கான் இதனை கூறினார்.

கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை போதைப்பொருள் கழுதைகள். என்ற சந்தேகத்தின் பேரில் மொத்தம் 55 மலேசியர்கள் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டனர்.

அவர்களில் 50 பேர் ஆண்கள், மீதமுள்ளவர்கள் பெண்கள். அவர்கள் 16 நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அதாவது இந்தோனேசியாவில் 10 பேர், சிங்கப்பூரில் 9 பேர், கம்போடியா, தைவானில் தலா ஆறு பேர், தாய்லாந்தில் 5 பேர், பெல்ஜியம், லாவோஸ் மற்றும் மக்காவ்வில் தலா மூன்று பேர், ஹாங்காங், தென் கொரியாவில் தலா இரண்டு பேர், பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஜோர்டான், மொராக்கோ, மியான்மர், நார்வேயில் தலா ஒருவர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த ஆண்டு முழுவதும் பொதுமக்களை போதைப்பொருள் கழுதைகளாக பயன்படுத்தும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் அதிகரிப்பதை புக்கிட் அமான் தீவிரமாகக் கருதுவதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset