நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

20 பேருடன் சென்ற துருக்கி ராணுவ விமானம்: ஜார்ஜியாவில் விழுந்து நொறுங்கியது

இஸ்தான்புல்:

20 பேருடன் பறந்த துருக்கி ராணுவ விமானம் ஜார்ஜியாவில் விபத்துக்குள்ளானது.

அஜர்பைஜானில் இருந்து விமானக்குழுவினர் உள்பட 20 பணியாளர்களுடன் ராணுவ விமானம் சி - 130 ஒன்று துருக்கிக்கு சென்று கொண்டு இருந்தது.

இந்த விமானம் துருக்கிக்கு சொந்தமானது ஆகும்.

அஜர்பைஜான், ஜார்ஜியா எல்லையில் பறந்து கொண்டு இருந்த போது திடீரென கீழே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தை துருக்கியின் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தி அறிவித்துள்ளது.

விமானத்தில் எத்தனை பணியாளர்கள் இருந்தனர் என்பது தெளிவாக தெரியவில்லை. 

அஜர்பைஜான், ஜார்ஜியா நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

சி-130 ராணுவ சரக்கு விமானங்கள் துருக்கியின் ஆயுதப் படைகளால் பணியாளர்களை கொண்டு செல்லவும், தளவாடங்களை கையாளுவதற்கும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset