நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கொஞ்சம் அதிகம் பேசினால் விசாரணைக்கு ஆள அனுப்புறாங்க; பதவியில் இருக்கும் போது சாதிப்பதை தான் வரலாறு பேசும்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

பதவியில் எத்தனை நாட்கள் இருப்போம் என்று நமக்கு தெரியாது.

ஆனால் பதவியில் இருக்கும் போது சாதிப்பதை தான் வரலாறு பேசும் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவின் 15ஆவது நிறைவு விழா என்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

பிரிக்பீல்ட்ஸ் வரும் போது எல்லாம் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி வருகிறது.

காரணம் இந்த பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா உருவானது முதல் இன்று வரை இங்குள்ளவர்களுடன் நான் கலந்துள்ளேன்.

இதன் அடிப்படையில் தான் எனக்கு இப்பகுதியில் எனக்கு பெரும் அளவிலான வரவேற்பு கிடைக்கிறது.

இதனால் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் என்னுடைய படங்கள் தான் அதிகமாக இருப்பது குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

வருடத்திற்கு ஒரு முறை வந்தால் தீபாவளிக்கு மட்டும் தான் படம் வரும்.

அதே வேளையில் பதவியில் இருக்கும் போது நாம் சாதிப்பதை தான் வரலாறு பேசும்.

ஆக பதவியில் எத்தனை நாட்கள் இருப்போம் என்று நமக்கு தெரியாது.

அப்பதவியில் இருக்கும் போது முறையாக கடமையை ஆற்ற வேண்டும்.

இப்போது கொஞ்சம் அதிகம் பேசினால் உடனே விசாரணைக்கு ஆளை அனுப்புறாங்க.

இதனால் இப்போது அதிகம் பேச முடியவில்லை.

எது எப்படி இருந்தாலும் பிரிக்பீல்ட்ஸ் வட்டார வணிகர்கள், மக்களுக்கான எனது குரல் ஒலிக்கும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset