நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாவிற்கான 40 சதவீத வருவாய் உரிமைகள்; மேம்பாட்டு ஒதுக்கீட்டைக் குறைக்க மத்திய அரசு தயாராக உள்ளது: பிரதமர்

கோலாலம்பூர்:

கூட்டரசு வருவாய் உரிமைகளில் 40 சதவீதத்தை சபாவுக்கு திருப்பித் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்றும் முயற்சியாக, சபாவிற்கான மேம்பாட்டு ஒதுக்கீட்டைக் குறைக்க அரசாங்கம் தயாராக உள்ளது.

இருப்பினும், கூட்டரசு அரசாங்கத்திற்கும் சபாவிற்கும் இடையிலான மோதலைத் தவிர்க்க இது குறித்த முடிவை முழுமையாக ஆராய வேண்டும். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.

மத்திய அரசு, மத்திய அரசியலமைப்பின் 112சி மற்றும் 112டி பிரிவுகளுக்கு கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும் எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.

இன்று மாலை நடைபெறும் சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முழு விஷயமும் விரிவாக விவாதிக்கப்படும் என்று கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset