நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிள்ளான் பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: பாதிக்கப்பட்டவர் போலிசாரின் தேடப்படும் பட்டியலில் உள்ளார்

ஷாஆலம்:

கிள்ளான் பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் போலிசாரின் தேடப்படும் பட்டியலில் உள்ளார்.

சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஷசாலி கஹார்  இதனை தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை கிள்ளான், புக்கிட் திங்கி பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்தது.

இந்த சம்பவத்தில் பலியானவர் சொஸ்மா சட்டத்தின் கீழ் போலிசாரால் தேடப்படும் நபர் ஆவார்.

34 வயதான அந்த நபருக்கு வேறு பல குற்றப் பதிவுகளும் உள்ளது.

இதுவரை விசாரணை பாதிக்கப்பட்டவரின் பின்னணியைக் கருத்தில் கொண்டு பல்வேறு அம்சங்களில் கவனம் செலுத்தப்படுகிறது.

அவரது மனைவி, குடும்பத்தினர் மற்றும் சம்பவத்திற்கு சாட்சிகள் சம்பந்தப்பட்ட ஏழு வாக்குமூலங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. பிரேத பரிசோதனை முடிந்து விட்டது.

மார்பு, வயிற்றில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் தான் மரணத்திற்கான காரணம்.

மேலும் அவரின் உடல் அடக்கம் செய்வதற்காக குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று அவர் சிலாங்கூர் போலிஸ் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset