செய்திகள் மலேசியா
7 கிலோ கெட்டமைன் வகை போதைப் பொருள்களை பயணப் பெட்டியில் மறைத்து வைத்திருந்த சீன நாட்டவர் கைது
சிப்பாங்:
கிட்டத்தட்ட 7 கிலோ கெட்டமைன் வகை போதைப் பொருள்களை பயணப் பெட்டியில் மறைத்து வைத்திருந்த சீன நாட்டவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த அக்டோபர் 28ஆம் தேதி கேஎல்ஐஏ முனையம் 2இல் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர்.
அப்போது விமான நிலையத்தின் வருகை மண்டபத்தில் ஒரு சீன நாட்டவர் கைது செய்யப்பட்டார்.
கைதான ஆடவரிடம் இருந்து 6,884 கிராம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றின் மதிப்பு 344,000 ரிங்கிட் ஆகும்.
அமலாக்கப் பிரிவு உறுப்பினர்கள், மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு துறை ஆகியோரின் குழுவால் இந்த கடத்தல் நடவடிக்கை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்கத் துறை இயக்குநர் சுல்கிஃப்லி முஹம்மது தெரிவித்தார்.
நாட்டிற்குள் நுழைய முயன்ற சந்தேக நபர் அவர் எடுத்துச் சென்ற பொருட்களை ஸ்கேன் செய்ததில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
சோதனையின் விளைவாக, கெட்டமைன் என சந்தேகிக்கப்படும் தூள் கொண்ட பல சிறிய வெளிப்படையான பிளாஸ்டிக் பொட்டலங்களை உறுப்பினர்கள் கண்டுபிடித்தனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 26, 2026, 7:03 pm
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே: டத்தோ ஸ்ரீ சரவணன்
July 26, 2026, 2:40 pm
