நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

குறைந்த வயதில் 880 கோல்கள்: மெஸ்ஸி புதிய சாதனை

வாஷிங்டன்:

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி அதிவேகமாக 880 கோல்களை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளார்.

இந்தர் மியாமி அணிக்காக இன்று அதிகாலை நடந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இந்தர் மியாமி அணி சியாட்டல் சௌண்டர்ஸ் அணியை 3-1 என வீழ்த்தியது. 

இந்தப் போட்டியில் 41ஆவது நிமிஷத்தில் ஜோர்டி ஆல்பா உதவியால் மெஸ்ஸி கோல் அடித்தார்.

இதுவரை மெஸ்ஸி 1,122 முறை விளையாடி 880 கோல்கள், 390 அசிஸ்ட்டுகளைச் செய்து அசத்தியுள்ளார்.

மிகக் குறைந்த வயதிலும், அதிவேகமாகவும் 880 கோல்களை மெஸ்ஸி நிறைவு செய்துள்ளார்.

போர்த்துகலைச் சேர்ந்த 40 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் (943) அடித்தவராக இருக்கிறார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset