செய்திகள் விளையாட்டு
“சில நேரங்களில் தலைவர் தன் சொந்த பணத்தையே செலவிட வேண்டியுள்ளது”: சுபஹான்
கோலாலம்பூர்:
2027 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெறவுள்ள தென்கிழக்காசிய (SEA) விளையாட்டுப் போட்டிகளை முன்னிட்டு, தேசிய ஹாக்கி வளர்ச்சி திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதற்காக தேசிய விளையாட்டு கவுன்சில் (MSN) போதுமான நிதி வழங்க வேண்டும் என மலேசிய ஹாக்கி கூட்டமைப்பு (MHC) எதிர்பார்க்கிறது.
ஐந்து பேர் கொண்ட ஹாக்கி வீரர்கள், உட்புற ஹாக்கி அணிகளுக்கு முழுநேர பயிற்சித் திட்டத்தைச் செயல்படுத்தும் பரிந்துரைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகள் MSN-க்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று அதன் தலைவர் டத்தோ ஸ்ரீ சுபஹான் கமால் தெரிவித்துள்ளார்.
மலேசியா எதிர்வரும் SEA விளையாட்டுகளில் ஆறு தங்கப் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற இலக்கை அடைய இந்த நடவடிக்கை மிகவும் முக்கியமானது எனறார் அவர்.
“ஆறு தங்கப் பதக்கங்களை வெல்ல வேண்டும் என்று மட்டும் கூறி, போட்டிக்கு ஒரு மாத காலக்கட்டம் இருக்கும் போது பயிற்சி தொடங்கினால் அது சாத்தியமாகாது,” என்று அவர் நேற்று MSN-இல் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்குப் பிறகு தெரிவித்தார்.
இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகள் ஏற்கனவே தங்களது பயிற்சி திட்டங்களைத் தொடங்கி பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தயாராகி வருகின்றன என்பதால் நாம் முன்கூட்டியே தயாராக இருப்பது மிகவும் அவசியம் என்று மேலும் பேசிய அவர் கூறினார்.
மேலும், 2027 SEA விளையாட்டுகளின் ஏற்பாட்டாளராக இருக்கும் மலேசியா, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய அதிக திட்டமிடலுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதே நேரத்தில், நாட்டின் ஹாக்கி வளர்ச்சி திட்டங்களை வலுப்படுத்தும் முயற்சியில் நிதி பற்றாக்குறை இன்னும் ஒரு முக்கிய சவாலாக உள்ளது என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார்.
MHC தற்போது ஆதரவாளர்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அணியின் தயாரிப்புகள் சீராக நடைபெற அரசு உதவியும் அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“நாம் வெற்றி பெற வேண்டும் என்றால், போதுமான நிதி தேவை. உண்மையில் சில நேரங்களில் அணியின் நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்பதற்காக தலைவர் தன் சொந்த பணத்தையே செலவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது,” என்றும் அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 1:09 pm
மனபலம் தான் வெற்றியைத் தீர்மானிக்கும்: லீ ஜி ஜியா
April 30, 2026, 9:14 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 30, 2026, 9:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் சமநிலை
April 29, 2026, 11:16 am
உலகக் கோப்பை அணிகளுக்கான கட்டணத்தை ஃபிஃபா அதிகரித்துள்ளது
April 29, 2026, 10:44 am
மோரின்ஹோ ரியல்மாட்ரிட்டிற்குத் திரும்புகிறார்?
April 29, 2026, 10:41 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி அணி வெற்றி
April 28, 2026, 12:23 pm
உபர் கோப்பை 2026: ஜப்பானிடம் பணிந்தது மலேசியா
April 28, 2026, 9:41 am
எம்பாப்பே பார்சிலோனா அணிக்கு எதிரான ஆட்டத்தை தவறவிடும் அபாயம் உள்ளது
April 28, 2026, 9:38 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
April 27, 2026, 9:56 am
