நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

899ஆவது கோலை அடித்து லியோனல் மெஸ்ஸி சாதனை

பால்டிமோர்: 

அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் வீரர் லியோனல் மெஸ்ஸி, 899ஆவது கோலடித்து சாதனை படைத்துள்ளார். 

அமெரிக்காவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் மேஜர் லீக் கால்பந்து (எம்எல்எஸ்) போட்டிகள் நடந்து வருகின்றன. 

இதில், முன்னணி அணிகள் பல ஆடி வருகின்றன. 

அர்ஜெண்டினாவை சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் வீரர் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இந்தர் மியாமி அணி, டி.சி.யுனைடெட் அணியுடன், பால்டிமோரில் நடந்த போட்டியில் மோதியது.

இதில் அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, 27ஆவது நிமிடத்தில் அட்டகாசமாக கோலை அடித்தார்.

இதைத் தொடர்ந்து  2-1 என்ற கோல் கணக்கில் இந்தர் மியாமி அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

இந்த கோலுடன் மெஸ்ஸி அடித்த கோல்களின் எண்ணிக்கை 899 ஆக உயர்ந்தது.

இன்னும் ஒரு கோல் அடித்தால் அவரது கோல் எண்ணிக்கை 900 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset