நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

“என்னுடைய செல்வாக்கையும் நம்பகத்தன்மையும் முடிவுக்குக் கொண்டு வாருங்கள்": துங்கு மகோத்தா இஸ்மாயில்

கோலாலம்பூர்: 

காற்பந்து துறையில் தம்மை விரும்பாத தரப்பினருக்கு ஜொகூர் மாநிலத்தின் ஆட்சி பொறுப்பை வகிக்கும் துங்கு மகோத்தா இஸ்மாயில் சவால் விடுத்துள்ளார்.

உள்ளூர், சர்வதேச காற்பந்து துறையில் தனது செல்வாக்கையும் நம்பகத்தன்மையையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய நேரம் இது என்று துங்கு மகோத்தா இஸ்மாயில் தமது X-தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு எதிரானவர்கள் சமூக ஊடகங்கள், காற்பந்து நிர்வாக அமைப்புகள் அல்லது பிற வழிகளின் மூலம் தங்களது முயற்சிகளை உடனடியாக தொடங்கலாம் என்றும் ஜொகூர் டாருல் தக்ஸிம் (JDT) காற்பந்து கழகத்தின் உரிமையாளருமான அவர் கூறினார்.

“காற்பந்து துறையில் என்னை விரும்பாத அனைவரிடமும் நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறேன். உள்ளூர், சர்வதேச காற்பந்து துறையில் என்னுடைய செல்வாக்கையும் நம்பகத்தன்மையையும் முற்றிலும் முடிவுக்கு கொண்டு வாருங்கள்.

“எதிரணிகளின் பெரும்பாலான ரசிகர்கள், இடைநீக்கம் செய்யப்பட்ட ஏழு வீரர்கள் தொடர்பான பிரச்சினைக்கு நான் தான் காரணம் என்று என்னை குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்.

“இவ்விஷயத்தில் நீங்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். இந்த நேரத்தையும் வாய்ப்பையும் முழுமையாக பயன்படுத்துங்கள். பேசுவது அல்லது எழுதுவது மட்டுமே எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஒன்றுபட்டு மேலும் தீவிரமாக முயற்சி செய்யுங்கள்,” என்று துங்கு மகோத்தா இஸ்மாயில் தம் சமூக வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.

முன்னதாக, ஏழு ஹரிமாவ் மலாயா வீரர்களின் ஆவணங்களைப் போலியாக உருவாக்கிய வழக்கில், விஷயங்களை சரிய விடாமல், மற்ற தரப்பினரைப் பயன்படுத்தி தன்னை பலிகடாக ஆக்குவதற்குப் பதிலாக, 'உள்ளிருப்பவர்கள்' பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மேலும், மலேசிய காற்பந்து சங்கத்தில் (FAM) சிலர் தம்மிடம் அதிருப்தியுடன் இருப்பதாகவும், சில தரப்புகள் பல்வேறு கதைகளைப் பயன்படுத்தி தம்மை எதிர்த்து பிரச்சாரம் நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“FAM-இல் சிலர் ஆரம்பத்திலிருந்தே என்னிடம் அதிருப்தியுடன் இருக்கிறார்கள், ஏனெனில் அவர்களால் பணம் சம்பாதிக்க முடியவில்லை. சிலர் திட்டங்களைப் பெற உதவி கேட்டுள்ளனர், சிலர் SPRM விசாரணையிலிருந்து தப்பிக்க உதவி கேட்டனர் என்று மேலும் பல கோரிக்கைகள் இருந்தன,” என அவர் பதிவிட்டார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset