நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

கம்போடியாவுடனான அமைதி உடன்பாடு ரத்து: தாய்லாந்து அறிவிப்பு

பேங்காக்:

கம்போடியாவுடன் செய்யப்பட்ட அமைதி உடன்பாட்டை ரத்து செய்வதாகத் தாய்லாந்து அறிவித்துள்ளது.

இரு நாடுகளிடையே உள்ள எல்லைப் பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் இரு தாய்லந்து ராணுவ வீரர்கள் மாண்டனர். அதைத் தொடர்ந்து தாய்லந்து அவ்வாறு தெரிவித்தது.

மலேசியப்  பிரதமர் அன்வாரின் பெருமுயற்சியில்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) தலைமையில் எட்டப்பட்ட அமைதி உடன்பாடு இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் என்று நம்பப்பட்டது.

திட்டமிட்டபடி சண்டைநிறுத்தம் நிலைத்திருந்தால் தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 18 கம்போடிய வீரர்கள் விடுவிக்கப்பட்டிருப்பர்.

தேசியப் பாதுகாப்பு அபாயங்கள் குறைந்துவிட்டன என்று தவறாக எண்ணியதாகத் தாய்லந்துப் பிரதமர் அனுட்டின் சான்விராகுன் (Anutin Charnvirakul) செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

அமைதி உடன்பாடு ரத்து செய்யப்பட்டதைப் பற்றிக் கம்போடிய அதிகாரிகள் எதுவும் சொல்லவில்லை.

இதற்கு முன்னர் கம்போடியா அதன் எல்லைப்பகுதியில் கண்ணிவெடி வைத்ததாகத் தாய்லந்து குற்றஞ்சாட்டியிருக்கிறது.

அவற்றைக் கம்போடியா நிராகரித்துள்ளது.

அமைதியை நிலைநாட்ட கம்போடிய உறுதியாய் இருப்பதாக அந்நாட்டின் தற்காப்பு அமைச்சு கூறியது.

ஆதாரம்: AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset